Friday, April 18, 2014

நிலவின் நிலவு



நிலவு எனக்கு பிடிக்கும்
அங்கு செல்ல ஆசை
அங்கு என்ன இருக்கும்?
அங்கு எப்படி இருக்கும்?
கற்பனை மேன்மேலும் உந்துகிறது

ஊர் பார்க்கும் நிலவு
ஊரால் பார்க்கப்படும் நிலவு
ஜென் துறவியைக் காட்டிலும்
அமைதி பூண்டு இருக்கிறதே

நிஜத்தில் அப்படி எப்படி இருக்கமுடியும்
அதைப் போல் தனிமையில் யோசித்தால்
ஆஹா நான் தவம் இருக்கிறேன் என்பேன் 

Wednesday, January 15, 2014

Ear-ringing

i noticed, as i drove my vehicle,
an earring of a woman,
gold plated and shinning,
like an umbrella opened on a summer day
a red bead cling out of it was dangling in air

"your earring is gorgeous", was all i wished to say her
driving happened to be the problem

the woman, the owner of the earring,
in another vehicle touched her,
touched her earring,
i felt happy
may be my thoughts would have rung to her ears!

Friday, August 16, 2013

Independence Day wishes

15th August 2013

One of my student wished me,with joy, "Happy independence day sir."

my mind retorted,pathetically, "sorry boy i'm married!"

(i did not have independence to say it loud)

சுதந்திர தின வாழ்த்துக்கள்

"சுதந்திர தின வாழ்த்துக்கள்" , என்று வாழ்த்தினார் ஓர் நண்பர் 

"மன்னிக்கவும், எனக்கு திருமணம் முடிந்து விட்டது" என்றவாறு நகன்ட்றேன்

Friday, July 26, 2013

பெப்ஸி மொழிக் காதல்



பெப்ஸி மொழிக் காதல் 
என்னவளை பார்க்கச் செல்கையில் 
"இந்த தாகம் பெரிதாக", இருப்பதை உணர்வேன் 



அவளிடம்  ஆவலுடன் என் காதலை தெரிவிக்க 
"ஓ யெஸ் இப்போ", என்று நேரம் கூறும் 


அவளைக் கண்டபின் வீடு செல்கையில் 
"இந்த உள்ளம் கேட்குமே மோர்"


ஆனால் அவள் பெப்ஸி அல்ல குடித்து தாகம் தீர்க்க 
அவள் என் இரத்தம், என் உயிர்ரோட்டம் உயிர்ப்பிக்க 

Sunday, December 30, 2012

my Exact Act

i am a hypocrite
       at every instant of my life
i act good 
       before my students
                  my parents and friends
Eureka!  People say i act
       when i'm natural
my act doesn't act
       when its me alone

EVEN THEN i couldn't 
       unleash the ME
               for
i'm bounded
                   within four walls
and left without the pain-giver!

Wednesday, October 31, 2012

ரண வேதனை


எனக்கு கஷ்டம் வரும் வேளையில் 
அவள் என்னுடன் இருப்பதில்லை 

அவள் இல்லை என்று புலம்புகிறேனா 
கஷ்டத்தை கண்டு கலங்குகிறேனா 
என்று சோதிப்பாலோ?

அவளின் நிசப்தத்தை எண்ணி இதயம் இருக்குகிறது 
கஷ்டங்களை எண்ணி மனது மடிகிறது 

எடுக்கவோ? கோர்க்கவோ?
எதை எடுக்க? எதை கோர்க்க?

அவள் இருந்தும் இறக்கிறாள்,
இறந்தும் இருக்கிறாள்.

என் காதலி என்ன யானையா?
இருந்தும் ஆயிரம் பொண், இறந்தும் ஆயிரம் பொண்.

யானை தான் போலும்!
காதல் யானை, காதலி யானை.

வாழ்க்கை வாட்டுகிறது, காதலியும் வாட்டுகிறாள்.

யானை சவாரி செய்ய இஷ்ட்டம் இல்லை எனக்கு 
யானையான காதலே, யானையான கஷ்ட்டங்கலே 

என்னை மிதியுங்கள், அல்லது வேறு யானையை துரத்துங்கள் 


Friday, March 16, 2012

என் மாயா என் பிரச்சனை

ஓரிரு வாரமாக சரியாக பேசவில்லை மாயாவிடம்... 


ஒரு மாலை பொழுதில் அவளே என்னை அலைபேசியில் அழைத்தால்.  அவள் வீட்டில் பல பிரச்சனைகள் என்றும் அவற்றையெல்லாம் அவள் ஒற்றை ஆளாக சமாளிக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினால்.


மீண்டும் ஒரு வார இடைவேளை... மீண்டும் ஒரு மாலை பொழுதில் அவளே என்னை அலைபேசியில் அழைத்தால்.


"என்னடா ரொம்ப நாலா உன்ட நான் பேசல நீயும் சண்ட போடல, அதுக்கு என்ன திட்டவும் இல்ல!",  ஆச்சர்யப்பட்டாள் என் மாயா.


"எனக்கு நீ தான் உலகம்.  எனக்கு நி மட்டும் தான் பிரச்சனை,  ஆனால் உனக்கோ ஆயிரத்து எட்டு பிரச்சனை, அதுல நானும் ஒன்றாக விரும்பல.  i love you forever and miss you forever", என்றேன் நான்.


சந்தோஷமாக வீட்டுக்கு நடந்தால், தெரு முனை வந்தவுடன் என்னை பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பினால் கண்களில் காதல் சந்தோஷத்துடன்.



Monday, February 27, 2012

உன் கன்னம்

உன் கன்னம் என்ன எளிப்பொரியா?
அதை வருடிய என் கைகள்
ஒற்றிகொண்டனவே உன் கன்னத்தோடு!

Thursday, December 8, 2011

நான் உறைந்தேன்

          எங்கே போகலாம் என்றால் எதோ ஒரு கோவிலுக்கு என்பது அவள் பதிலாக இருக்கும்.  ஒரு நாள் அவள் ஆசைக்கினங்க ஒரு  கோவிலுக்கு அழைத்துச் சென்றேன்.  அவள் அந்த கோவிலுக்கு புதிது, நானும் தான்.  நான் அந்த கோவிலின் வழிப்போக்கன் மட்டுமே.

      "நேத்து இந்த கோவிலுக்கு வந்தேன் உனக்கும் புடிக்கும்ம்னு தோனுச்சு... இனிக்கு வந்துட்ட",  காதலியிடம் பொய் சொல்வதும் ஒரு சுகம்தான்.

            "பரவாலையே நல்ல பெரிய கோவிலா தன் இருக்கு."

            அவள் கண்கள் கோவில் உலா வந்தன.  என் கண்கள் பிள்ளையார் போல அவளை மட்டும் சுற்றியது.


     "எவ்ளோ சிலைகள் இந்த கோவில்ல!  நல்லா இருக்கு டா", பரவசம் அடைந்தாள் என் அழகி.


          "ஆமா நேத்து கூட இவ்ளோ சிலைகள் இல்ல.  உன்ன பார்த்த ஜனங்க தான் இப்படி ஆகிடாங்கனு நெனைக்குறேன்", என்றேன் நான்.


            "எப்படி ஆகிட்டாங்கலாமா?", வினவினால் ஆவலோடு.


   "இப்படி ஒரு அழகு சிலை நடக்கும்போது நாம் யாரும் குறுக்க வந்திரகுடாதுன்னு நினச்சு சிலையா ஓரஞ்சிருபாங்க", விளக்கினேன் நான்.


          "சாமி தான் பா சிலையா இருக்கும்", என்றால் தப்பிக்க.


          "நீ எனக்கு சாமி தான் பிள்ள",  விடவில்லை நான்.


          "அப்ப நீங்க என் உறைஞ்சு போகல சார்?",  அவள் விடுவதாக இல்லை.


          "உன்ன  பார்த்து உரையாமல் உன் பின்னால் இது போல் எப்போதும் திரிய வேண்டும்னு இந்த பக்தனுக்கு அருள் புரிஞ்சது மறந்துருச்சா என் சாமி?"


          "நீ தான் என்ன காப்பத்தனும்",  வெட்கத்தில் இறைவனிடம் முறையிட்டால்.  நான் உறைந்த நிமிடம் அது.





தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...