Thursday, December 8, 2011

நான் உறைந்தேன்

          எங்கே போகலாம் என்றால் எதோ ஒரு கோவிலுக்கு என்பது அவள் பதிலாக இருக்கும்.  ஒரு நாள் அவள் ஆசைக்கினங்க ஒரு  கோவிலுக்கு அழைத்துச் சென்றேன்.  அவள் அந்த கோவிலுக்கு புதிது, நானும் தான்.  நான் அந்த கோவிலின் வழிப்போக்கன் மட்டுமே.

      "நேத்து இந்த கோவிலுக்கு வந்தேன் உனக்கும் புடிக்கும்ம்னு தோனுச்சு... இனிக்கு வந்துட்ட",  காதலியிடம் பொய் சொல்வதும் ஒரு சுகம்தான்.

            "பரவாலையே நல்ல பெரிய கோவிலா தன் இருக்கு."

            அவள் கண்கள் கோவில் உலா வந்தன.  என் கண்கள் பிள்ளையார் போல அவளை மட்டும் சுற்றியது.


     "எவ்ளோ சிலைகள் இந்த கோவில்ல!  நல்லா இருக்கு டா", பரவசம் அடைந்தாள் என் அழகி.


          "ஆமா நேத்து கூட இவ்ளோ சிலைகள் இல்ல.  உன்ன பார்த்த ஜனங்க தான் இப்படி ஆகிடாங்கனு நெனைக்குறேன்", என்றேன் நான்.


            "எப்படி ஆகிட்டாங்கலாமா?", வினவினால் ஆவலோடு.


   "இப்படி ஒரு அழகு சிலை நடக்கும்போது நாம் யாரும் குறுக்க வந்திரகுடாதுன்னு நினச்சு சிலையா ஓரஞ்சிருபாங்க", விளக்கினேன் நான்.


          "சாமி தான் பா சிலையா இருக்கும்", என்றால் தப்பிக்க.


          "நீ எனக்கு சாமி தான் பிள்ள",  விடவில்லை நான்.


          "அப்ப நீங்க என் உறைஞ்சு போகல சார்?",  அவள் விடுவதாக இல்லை.


          "உன்ன  பார்த்து உரையாமல் உன் பின்னால் இது போல் எப்போதும் திரிய வேண்டும்னு இந்த பக்தனுக்கு அருள் புரிஞ்சது மறந்துருச்சா என் சாமி?"


          "நீ தான் என்ன காப்பத்தனும்",  வெட்கத்தில் இறைவனிடம் முறையிட்டால்.  நான் உறைந்த நிமிடம் அது.





தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...