Friday, December 6, 2019

சாமானியன் அல்லா சாமானியன்

என் மகளின் புதியதாய் வாங்கிய மிதிவண்டியின் சக்கரத்தில்  காற்று இறங்கிய படி இருக்க தெருவோரத்தில் இருக்கும் சைக்கிள் கடைக்கு எடுத்துச் சென்றேன் .
"புதுசா இருக்கு சார்! இருங்க பாக்கறேன்", என்றார் ஆளுக்கு சட்டை அணிந்த முதலாளி .
நொடிகள் கடந்த நிலையில் ...
"வோல் ட்யூப் போயிருக்கின்னு நெனைக்கிறேன், சரி பண்ணிட்டேன்", என்றார்.
"ட்யூப கழட்டி பாக்கலாம்ல?  அப்புறம் மறுபடியும் பிரச்னை வரப்போகுது", என்றேன் அலைவதற்கு சளைத்தவனாய்.
"இல்ல சார் புது சைக்கிள் பிரிச்சு பாக்க மனசு வரல.", என்றார் புன்னகைத்தவாரு.
மலைத்து நின்றேன்.  சாமானியன் என்று எண்ணிவிட்டோமே, தவறு.
"எவ்வளவு பணம் அண்ணே?", என்றத்துக்கு "போங்க சார் பிள்ளைகள் சைக்கிள்க்கு எதுவும் வேண்டாம்" என்றார்.
மூன்று ரூபாய் காற்றடித்த காசு என்று கொடுத்து விட்டு கிளம்பினேன், கற்றவனாய்.

Nailed

 "Appa, What's good Friday?", my daughter asked "That's a day when Jesus was nailed to the cross", was my reply ...