Monday, June 7, 2021

தேடல்

 அடர்ந்த காடு

உள்நுழைந்தால்
பழகிய மரங்கள்
வேம்பு, புளி, அரசம், ஆலம், புங்கை, பலா
பழகிய நிறங்கள்
பச்சை, மஞ்சள், கருப்பு, வெள்ளை, சிவப்பு
சில நேரங்களில் கண்டிராத பூக்கள்‌ - சிறிதும், பெரிதுமாய்
ஓரிடத்தில் கொய்து, வேறிடத்தில் எறிவதா?
செடிகளோடு இருக்கட்டும்

இன்னும் சில தூரம்..

பழகிப்போய் இருந்தது
காட்டின் மணம் நாசிக்கு
பூச்சிகளின் இரைச்சல் காதுக்கு
மரம் செடிகளுக்கு இடையே முட்கள்
பாதங்களில் ஒட்டிய மண்ணும் சக்தியும்

உணவுக்குப் பஞ்சம் இல்லை
காடு இல்லை என்றா கூறிவிடும்?
பழங்கள், சிறு நீரோடை தண்ணீர்
சேகரித்த உணவு

இன்னும் சில காலம்..
நடை, காடு, நான் என்ற வேறுபாடு குறைந்து போனது


அது இரவா? அது பகலா? தேவையில்லை
இரண்டு கண்கள் என் பார்வையில் பளிச்சிட்டன
பயம் வந்தது... காட்டிற்குள் ஓடினேன்
அதே குரல், கேட்டு மயங்கிய குரல், ஒலித்தது
அழுகை வந்தது... காட்டிற்குள் ஓடினேன்
ஆடைகள் அற்ற உடல் நெருங்கியது
கோபம் வந்தது... காட்டிற்குள் ஓடினேன்

நினைவுகள் கூடி துரத்தியது
பழகிய மரம், பூக்கள், நிரம், மணம், உணவு, நீர்
பயம், அழுகை, கோபம், ஆகியவற்றை மீறி
தனிமை பீறிட்டது... ஓடினேன் மீண்டும்

கலங்கிய கண்கள், புன்னகை ஏந்திய உதடுகள்
விரிந்த கைகள், அதனிடையே தலைசாய மார்பு

ஓட்டம் நின்றது
காட்டிற்கு வெளியே நானாக நாங்கள்

Nailed

 "Appa, What's good Friday?", my daughter asked "That's a day when Jesus was nailed to the cross", was my reply ...