Wednesday, October 31, 2012

ரண வேதனை


எனக்கு கஷ்டம் வரும் வேளையில் 
அவள் என்னுடன் இருப்பதில்லை 

அவள் இல்லை என்று புலம்புகிறேனா 
கஷ்டத்தை கண்டு கலங்குகிறேனா 
என்று சோதிப்பாலோ?

அவளின் நிசப்தத்தை எண்ணி இதயம் இருக்குகிறது 
கஷ்டங்களை எண்ணி மனது மடிகிறது 

எடுக்கவோ? கோர்க்கவோ?
எதை எடுக்க? எதை கோர்க்க?

அவள் இருந்தும் இறக்கிறாள்,
இறந்தும் இருக்கிறாள்.

என் காதலி என்ன யானையா?
இருந்தும் ஆயிரம் பொண், இறந்தும் ஆயிரம் பொண்.

யானை தான் போலும்!
காதல் யானை, காதலி யானை.

வாழ்க்கை வாட்டுகிறது, காதலியும் வாட்டுகிறாள்.

யானை சவாரி செய்ய இஷ்ட்டம் இல்லை எனக்கு 
யானையான காதலே, யானையான கஷ்ட்டங்கலே 

என்னை மிதியுங்கள், அல்லது வேறு யானையை துரத்துங்கள் 


தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...