Sunday, January 25, 2026

தொட்டில்கள்

 


மூச்சின் மேல் மூச்சாய்  

மூடி எழும் இரு நிழல்கள்—  

மண்ணின் நரம்புகளில்  

மெல்லிசை போலச் சுழலும்.  


வாக்கும் விலக்கமும் இல்லாத  

விலங்குகளின் வழிபாடு இது.  

முன்னொரு முறை வீழ்ந்த இலை,  

இப்போது பூவாய் மலர்கிறது.  


அவர்கள் பேசவில்லை.  

நினைவுகள் பேசுகின்றன.  

தோல்களைத் துறந்த பின்  

தோள்கள் தேவைப்படவில்லை.  


ஒரு பிளவு விழுகிறது  

பழுத்த அத்தி பழத்தில்.  

ஒரு பெயர் மறக்கப்படுகிறது  

மனதில்.  


மனிதனாய் நான்,  

மனதின்றி உன்னைத் தேடுகிறேன்.  

உடல் ஒரு மொழி என்றால்,  

நாம் உரையாடும் கவிதை இது.

தொட்டில்கள்

  மூச்சின் மேல் மூச்சாய்   மூடி எழும் இரு நிழல்கள்—   மண்ணின் நரம்புகளில்   மெல்லிசை போலச் சுழலும்.   வாக்கும் விலக்கமும் இல்லாத   விலங்குகள...